நடிகை ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்கும்போதே சர்ச்சையில் சிக்கினர். காதலிப்பதாக ஓவியா தைரியமாக கூற அதை ஆரவ் மறுத்தார். பின்னர் முத்தம் கொடுத்ததாக கூறியது சர்ச்சையானது.
நிகழ்ச்சி முடிந்தபிறகும் இருவரும் ஒன்றாகவே உள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் பற்றி கேட்கப்பட்டது.
அவர் பாய் பிரென்டா இல்லை பிரென்டா என கேட்டதற்கு, “அது பிரெண்ட்ஷிப்புக்கு மேலே தான், ஆனால் பாய்பிரெண்ட் என சொல்ல முடியாது. எங்களுக்கு நடுவில் ஒரு நெருக்கம் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு கேள்வியில் உங்களுக்கு திருமணம் செய்ய விருப்பமா, இல்லை லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆசையா என கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் ‘லிவ்இன் ரிலேஷன்ஷிப்’ என பதில் அளித்துள்ளார்.
“அது நமது கலாச்சாரத்திற்கு சரியில்லை. ஆனால் அதனால் வரும் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இருந்தால் செய்யலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.