பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட சில போட்டியாளர்களை மீண்டும் விருந்தினர்கள் என்ற பெயரில் மீண்டும் வீட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அவர்கள் இன்று மற்ற போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கவேண்டும் என பிக்பாஸ் சொன்னார். அவர்களும் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி என விருது கொடுத்தனர். அதனால் கோபமான அவர் அதை தூக்கி எறிந்துவிட்டார். இது பற்றி சாக்ஷி-லாஸ்லியா இடையே பெரிய சண்டை நடந்தது. மோகன் வைத்யாவும் கோபமாக கத்திகொண்டிருந்தார்.
அப்போது லாஸ்லியாவுக்கு ஆதரவாக சேரன் மட்டுமே குரல் கொடுத்தார். “விருது வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் அவர் விருப்பம், நீங்கள் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு பச்சோந்தி என பட்டம் கொடுத்தால் பரவால. காரணம் சொல்லாமல் கொடுத்தால் அவருக்கு கோபம் வரத்தான் செய்யும்” என சேரன் பேசினார்.
லாஸ்லியாவுக்கு நெருக்கமாக இருக்கும் கவின் சண்டை நடந்தபோது பெரும்பாலும் வாயை திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.