நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இத்திரைப்படம் வரும் ஓணம் தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிய நிலையில் மற்றுமொரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்த படத்தில் ஷோபா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளதாக தெரிவித்து புதிய போஸ்டருடன் கூடிய ஒரு அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதே போல் இந்த படத்தில் நயன்தாராவின் தோற்றமும் வித்தியாசமாக இருப்பதால் இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நிவின்பாலியுடன் நயன்தாரா நடித்த இந்த படத்தை தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.
ஷான் ரஹ்மான் இசையில் ஜாமோன் ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
இதேவேளை, நயன்தாரா நடிப்பில் உருவான ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் நேற்று வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தால் இந்த படத்தின் வெளியீட்டுத் திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.