பிரபல தொலைக்காட்சி நடிகை குஷ்பு நடிக்க லக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் சீரியலில் இருந்து நடிகை ஜெனிபர் திடீரென விலகியுள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர், சீரியலில் குஷ்புவிற்கு அடுத்து முக்கியமான நாயகியாக என் வேடம் கூறினார்கள், அதனால் நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
மூன்று மாதம் நடித்த பிறகு நக்ஷத்ரா வந்ததும் எனக்கு சொன்ன கதாபாத்திரத்தில் தான் அவர் நடிக்கிறார் என்று தெரியவந்தது. சீரியல் குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள், பெரிய நடிகையான குஷ்புவிற்கு தெரியாமல் இது நடந்திருக்காது, அவரும் இதை கண்டுகொள்ளவில்லை.
நாயகி என்று கூறி துணை நடிகையாக நடிக்க வைத்துள்ளனர், இதனால் மனமுடைந்து தான் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று பேசியுள்ளார்.