பரத், சந்தியாவின் நடிப்பில் கடந்த 2004ல் வெளியாகியிருந்த படம் காதல். பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார்.
இப்படத்தின் மூலமாக தான் சந்தியா என்ற பெயர் காதல் சந்தியா என்றானது. இவ்வளவு மிகப்பெரிய ஹிட் பெற்ற இந்த படத்தில் கதாநாயகனாக முதலில் நடிக்க வேண்டியது தனுஷ் தானாம்.
அதேபோல் தனுஷ் மற்றும் ஷ்ரேயாவின் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் ஹீரோவாக முதலில் நடிக்க வேண்டியது நான் தான் என்று பரத்தே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.