பிக்பாஸ் சீசன் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கொடுக்கப்படும் டாஸ்க்கை சரியாக செய்கிறார்களோ..? இல்லையோ..? ஒவ்வொருவரின் பிறந்தநாளையும் மிகச்சரியாக கொண்டாடி விடுகிறார்கள். அந்த வகையில், மும்தாஸ், சென்றாயன், ரித்விகா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரின் பிறந்தநாள்கள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்ட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு நடிகை ரித்விகாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ரித்விகாவை வீட்டில் உள்ள அனைவரும் வாழ்த்தினார்கள். தனக்கு கேக் கொடுக்க வந்த ரித்விகாவிடம் இருந்து கேக்கை வாங்கிய ஐஸ்வர்யா தத்தா அதனை ரித்விகாவுக்கே ஊட்டி விட்டார்.
கேக்கை ஊட்டும் போது, “இந்தாங்க, நல்ல பெரிய ஆளா வருவீங்க..?!?” என்று நையாண்டி செய்வது போல வாழ்த்தினார். இதனை பார்த்த யாஷிகா ரித்விகாவை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள், பிறந்தநாள் அன்று கூட இப்படிதான் நடந்து கொள்வதா..? என்று விளாசி வருகிறார்கள்.