கொலையுதிர் காலம் திரைப்படம் குறித்த நடிகர் ராதா ரவியின் கருத்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, முன்னொரு காலத்தில் நடிகைகள் சாமி வேடம் தரிக்க வேண்டுமானால் கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அதாவது கையெடுத்து கும்பிடுபவர்களும் நடிக்கலாம். கூப்பிடுபவர்களும் நடிக்கலாம் என சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும் போது, “ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விடயம், அவருடைய கீழ்த்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரித்து கேட்பது” என தெரிவித்துள்ளார்.