பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி சீரியல் அதிகம் பிரபலம். அதில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடிக்கு ரசிகர்களும் அதிகம் உள்ளது.
இந்நிலையில் வரும் எபிசோடுகளில் வரும் காட்சிகள் பற்றிய போட்டோவை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் ஹாரர் கெட்டப்பில் உள்ளனர். அதனால் என்ன காட்சியாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டுவருகின்றனர்.
மற்றொரு புறம் சிலர் “இது என்ன.. சரவணன் மீனாட்சி சீரியல் போல ஹாரர் சீரியலாக மாறிவிடுமோ?” எனவும் கலாய்த்து வருகின்றனர்.