“அர்ஜூன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படம் 2019 கோடைகால சிறப்புப் படமாக ரிலீஸாக இருக்கிறது.
டியர் காம்ரேட் படத்தின் படபிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஓடும் ரயிலில் விஜய் ஏறும் காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் படிக்கட்டில் ஏறும்போது தடுமாறிய விஜய், அப்படியே விழப்போனார். நல்ல வேளையாக உதவியாளர்கள் அவரை இழுத்து, பெரும் விபத்திலிருந்து காப்பாற்றினார்கள்
தற்போது ஆந்திர கடற்கரையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.