மிழ்சினிமாவில் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான சாமி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகளை பெற்று எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யாமல் பெரும் தோல்வியை சந்தித்தது.
இவர் தற்போது துருவங்கள் பதினாறு மற்றும் கடாரம் கொண்டன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்த துருவங்கள் பதினாரு திரைப்படத்தின் டீரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதும் மிகப்பெரும் எதிர்பார்பை எற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் பேஸ்டர் வெளியாகிவுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் டீரைலர் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும் மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாக உள்ள அதே தினத்தில் விக்ரம் படத்தின் டீரைலர் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.