தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது எப்போதும் நமது ரஜினிகாந்த் தான். அவரது ரசிகர்கள் தற்போது சினிமாவில் பல்வேறு துறைகளில் உள்ளனர்.
அப்படிதான் பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். அவரை விட அவரது அப்பா எஸ்.பி.கஜராஜ் மிக தீவிரமான ரஜினி ரசிகர்.
ரஜினியின் கபாலி படத்தில் நடித்திருந்த அவர் இந்த பேட்ட படத்திலும் நடித்திருந்தார். இவர் ரஜினியின் படம் வெளிவந்தாலே அதை குறைந்தது 5 முறையாவது பார்த்துவிடுவாராம்.
ரஜினியின் தங்கமகன் படத்திற்காக ஒரு ஷோவையே முழுவதுமாக விலைக்கு வாங்கி தனது உறவினர் அனைவரையும் அழைத்து சென்று காட்டியுள்ளார்.