லைக்கா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய ‘2.O’ திரைப்படம் சீனாவில் வெளியிடப்படவுள்ளது.
இத்திரைப்படம் பிரம்மாண்டமாக சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சீன மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ‘பாலிவுட் ரேபோட் 2.O’ – ரீசர்ஜன்ஸ் இன் சைனா’ எனப் பெயரிட்டுள்ளது.
சீனாவில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாவதால் 200 கோடிக்கு மேல் வசூலிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திரைப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே, ஆதில் உசைன், கலாபவண் சஜோன், மயில்சாமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.