நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிடுவார் என்று தான் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்து நீண்ட காலமாகிவிட்ட நிலையிலும் இன்னும் கட்சி பற்றிய அறிவிப்பு வரவில்லை.
மேலும் அடுத்த மாதம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் ரஜினியை பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சாமி தாக்கி பேசியுள்ளார்.
“ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் அப்போவே சொன்னேன், அதற்கான காரணம் எனக்கு தெரியும். அவர் வரமாட்டார். வரமுடியாது. ஒருவேளை வந்தார்னா அவர் உடனடியாக ஜெயிலுக்கு போவார்” என்று அவர் கூறியுள்ளார்.