சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அதில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடித்துவருகிறார். இந்த படம் முடிந்தபிறகு ரஜினி இயக்குனர் சிவாவுடன் கூட்டணி சேர்கிறார்.
இந்த படத்தில் இசையமைப்பாளராக இமானை தான் அணுகியுள்ளனர் என கூறப்படுகிறது. சிவாவின் முந்தைய படமான விஸ்வாசத்திலும் இமான் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சென்டிமென்டில் தான் சிவா தற்போது இமானை தேர்தெடுத்துள்ளார்.