ரஜினி தான் தற்போது உள்ள பல நடிகர்களின் உந்துதலாக உள்ளார். ரஜினியை பார்த்து பல நடிகர்கள் திரை துறைக்கு வந்துள்ளனர்.
அப்படி தான் பல படங்களில் குணச்சித்திர வேடம் ஏற்றிருக்கும் ஆடுகளம் நரேனுக்கும் ரஜினி சினிமா வெறியை ஊட்டியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நரேன், அந்த காலத்தில் சிவாஜி சார் தான் எனக்கு பிடிக்கும். எம்.ஜி,ஆர் சார் படம் பார்க்க எண்டர்டெயிங்காக இருக்கும்.
அப்போது தான் புயல் போல் ரஜினி சார் வந்தார். அதனாலேயே எனக்கு சினிமா மீதான ஆவல் அதிகமாகி சினிமாக்குள் வந்து தற்போது பேட்டி கொடுக்கிறேன் என்றார்.