சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷனின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது ‘தர்பார்’ திரைப்படம்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் தேங்காய் சீனிவாசன் பேரன் ஆதித்யா இந்த படத்தில் இணைந்துள்ளார். ரஜினியுடன் ஆதித்யா நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடித்ததில் தனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்ததாக ஆதித்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியுடன் ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே, ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த ‘பில்லா’ உட்பட ஒருசில படங்களில் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.