சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அண்மையில் பொங்கல் ஸ்பெஷலாக வந்த பேட்ட படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகிவிட்டது.
நல்ல வரவேற்பும், வசூலை பெற்று ரூ 200 கோடிகளை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய அம்சமே ரஜினியை இளம் வயதில் எப்படியெல்லாம் பார்த்து ரசித்தோமோ அதை அப்படியே கண் முன் கொண்டு வந்ததுதான்.
இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றிவர் விவேக். விஜய் நடித்த மெர்சல், சர்கார் படங்களிலும் பாடல்கள் இவருடையது தான். தற்போது அட்லீ இயக்கும் விஜய் 63 படத்தில் இவரே பணியாற்றுகிறார்.
இந்நிலையில் டிவிட்டரில் சூப்பர் ஸ்டாரை சந்தித்து பேசியதை மறக்க முடியாது. ஸ்டைலிஷ், உறுதி, பணிவு, உற்சாகம், இனிமை. ஒரு லெஜண்டுக்குள் இத்தனையுமா என கூறியுள்ளார்.
With the SUPERSTAR ? Unforgettable Conversation !!
Stylish.. Confident.. Humble.. Electric.. Sweet
What a Package this Legend is !! pic.twitter.com/2DFXDGXjmc— Vivek Lyricist (@Lyricist_Vivek) January 26, 2019