ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, சில தினங்களுக்கு முன்பு நடிகரும், தொழிலதிபருமான விசாகனை மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று இரவு டுவிட்டரில் சவுந்தர்யா, ஐஸ்லாந்தில் தேனிலவில் இருப்பதாக புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதற்கு அவருடைய கமெண்ட் பக்கத்தில் பலரும் எதிர்மறை கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இராணுவத்தின் மீது அதிரடித் தாக்குதல்
நடத்தப்பட்டு 40 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு பதிவைப் போடுவது சரியா என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
“இது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதற்காக அதை புகைப்படம் எடுத்து இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை டுவிட்டரில் வெளியிடுவது தேவையற்றது” என்று பலரும் பதிவிட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இருவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.