ரஜனிகாந்தின் ‘பேட்ட ’படத்திற்கு தனுஷ், சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு பாராட்டு
தனுஷ்
பேட்ட ஒரு காவியம். சூப்பர் ஸ்டார், லவ் யு தலைவா…தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. மொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். கார்த்திக் சுப்பராஜ், பெரிய பெரிய பெரிய நன்றி உங்களுக்கு. அனிருத், இன்று வரையில் உங்களது சிறப்பான பின்னணி இசை. பேட்ட பராக்….
சிவகார்த்திகேயன்
பேட்ட. தலைவர் மொத்த மாஸ் விதத்தில்…ஸ்டைலிஷ், எனர்ஜடிக், ஆக திரையில் ரஜினி சார் உள்ளார். அனிருத் சார் பிஜிஎம் வேற லெவல். இது சுத்தமான தலைவர் அசைவு. கார்த்திக் சுப்பராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
மகேஷ் பாபு
பேட்ட படம் நான் உள்ளிட்ட ரஜினி ரசிகர்களுக்கான காணிக்கை. ஒரே ஒரு வார்த்தை, தலைவா. கார்த்க் சுப்பராஜ், இப்போது இருப்பவர்களில் நீங்களும் மிகச் சிறந்த திறமைசாலி. ஒளிப்பதிவாளர் திரு வழக்கம் போல மிகச் சிறப்பு. மொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்.
ராகவா லாரன்ஸ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க தலைவர் ஸ்டைலில் ஒரு படம். நான் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன். கத்திக் கத்தி என் தொண்டை கம்மிவிட்டது. அனைத்து தலைவர் ரசிகர்களுளுக்கும் அதே மாதிரிதான் நடந்திருக்கும். விஜய் சேதுபதி மிகச் சிறப்பு. கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ், அனிருத் ஆகியோருக்கு நன்றி.