விஜய்யின் மனைவி சங்கீதா தங்கள் காதல் பற்றி ஒருமுறை பகிர்ந்து கொண்டதாவது, ‘பூவே உனக்காக’ படத்தைப் பார்த்து விஜய்யின் தீவிர ரசிகையானேன். அவரைப் பார்ப்பதற்காகவே லண்டனிலிருந்து கிளம்பி வந்தேன்.
ரசிகை என்று அறிமுகமாகி, நண்பர்களாகி, பின்னர் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார்.ஒருமுறை அவருடைய வீட்டுக்கு அழைத்திருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா எல்லோருமே என்னிடம் நன்றாக பழகினார்கள்.
முதல் சந்திப்பிலேயே, எனக்கும் விஜய்க்கும் ஒருவருக்கொருவர் பிடித்துவிட்டது. அவரை பார்த்துவிட்டு லண்டன் சென்ற பின்னர், மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது.
விஜய்யைப் பார்க்க இரண்டாவது முறை அவருடைய வீட்டுக்குச் சென்றேன், அவருடைய அப்பா என்னிடம், விஜய்யும் நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என கூறியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.இதன்பின்னர், எல்லோருடைய ஆசிர்வாதத்துடனும் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.