இளையராஜாவின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் முதல் நாளான இன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
நிகழ்ச்சி மேடையில் ரகுமான் மற்றும் இளையராஜா இருக்கும்போது தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி கேட்டுக்கொண்டதற்காக ரகுமான் இசையில் இளையராஜா பாடினார்.
அப்போது ரகுமான் டியுனை வாசிக்காமல் பாடலுக்கு தகுந்தார்போல் கீபோர்டில் வாசித்தார். அதை பார்த்த இளையராஜா ‘டியூன் தெரியும்ல உனக்கு?’ என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.
அது விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. அதன் விடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
AR Rahman played keyboards for Maestro Illayaraja.. #ARRahman#Ilaiyaraaja75 pic.twitter.com/PnxlcDz8Op
— Anniyan (@TN_Anniyan) February 2, 2019