நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பட்டிபுலம் என்ற திரைப்படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகராக நடித்துவரும் யோகி பாபு தற்போது முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் சுரேஷ் கூறும்போது, “நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் நகைச்சுவையை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்.
படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்தில் அவர் சிறப்பாகத் தனது பணியினை முடித்திருக்கின்றார். நிச்சயம் இரசிகர்களுக்கு இத்திரைப்படம் நகைச்சுவை விருந்தாக அமையும்” என இயக்குநர் சுரேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.