உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணே கலைமானே படம் வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உதய்க்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
இதன் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய உதய், படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கும்போது யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை தயார் செய்து தரவில்லை.
அதனால் சில ஹிந்தி பாடல்களை போட்டுத்தான் பாடல் காட்சிகளில் எங்களை நடிக்க வைத்தார் இயக்குனர் சீனுராமசாமி. அப்படி படமாக்கிய காட்சிகளை வைத்து தான் பின்னர் பாடலுக்கு இசையமைத்தார் யுவன் என்றார்.