தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. யாமிருக்க பயமேன் திரைப்படத்தில் பண்ணி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகர் யோகிபாபு. அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் காமெடி நடிகராக நடித்துவருகிறார்.
மேலும் எமதர்மராஜா படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்நிலையில் அடல்ட் சம்மந்தமான காமெடி மற்றும் ஹாரர் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் யோகி பாபு.
இந்தப்படம் பற்றி அதன் இயக்குனர் கூறுகையில் இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப்படம் 2 . 0 படத்தில் வேலைசெய்த ஒருசில தொழிநுட்ப வல்லுநர்களை வைத்து 3D இல் எடுக்கப்போவதாகவும் இதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படம் 3Dயில் படம்பிடிக்கப்படும் முதல் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.
மேலும் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர்.