பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்பு படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது இவர்களது திருமணம். அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையேடு கணவரை விட்டு விட்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு பறந்தார் அம்மணி. சென்ற இடத்தில் படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து அசத்தினார்.
சமீபத்தில், பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட அவர் கணவர் கட்டிய தாலியை ப்ரெஸ்லேட் போல கையில் அணிந்து கொண்டு கெட் வாக் செய்து வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும், இந்தியர்களின் கலாச்சராத்தை நாசம் செய்கிறார் என்று கூறினார்கள் சில அமைப்பினர்.
இதனை தொடர்ந்து, தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சோனம் கபூர். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த அம்மணி நடிகை ஜாக்லின் ஃபெர்ணான்டஸ் அணிந்திருந்த ஆடை விலகியதால் அதனை சரி செய்ய அவரின் பின் பக்கம் நின்று கொண்டு ஆடையை சரி செய்தார். இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக ஜாக்லினின் பின்னழகில் உறவு கொள்வது போல ஆபாச செய்கை செய்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.