ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின், பார்த்திபன் கனவு என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர்.
ஆனால், ஒரு சில தவறான படங்களின் தேர்வால் மார்க்கெட் இழக்க நேரிட்டது, இவர் கடைசியாக நடித்த படங்களில் நண்பன் மட்டுமே கொஞ்சம் குறிப்பிட்ட சொல்ல தோன்றும்.
இவர் தவறவிட்ட படங்கள் என்ன என்று கேட்டால், நீங்களே ஷாக் ஆவீர்கள், லிங்குசாமி இயக்கிய ரன், மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து ஆகிய படங்கள் இவருக்கு வந்தது தானாம்.
மேலும், தெலுங்கில் எம்.குமரன் படத்தின் கதை முதன் முதலாக இவருக்காக தான் எழுதப்பட்டதாம், இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாராம்.