முருகதாஸ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் தான் நடந்து வருகின்றது.
அடுத்த வருட பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது, இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து முருகதாஸ் அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இப்படத்தை தெறி, கபாலி ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.