நடிகை ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபணி கான்’ நகைச்சுவைத் திரைப்படத்தின் திரையிடல் நிகழ்வு மும்பையில் இடம்பெற்றுள்ளது.
பல பிரபலங்களின் பிரசன்னத்துடன் குறித்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றிருந்தது.
2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘எவ்ரிபொடீஸ் ஃபேமஸ்’ என்னும் டச்சுத் திரைப்படத்தினைத் தழுவியதாக, டுபுடன்ட் அடுல் மென்ஜ்ரெகாரின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் ‘ஃபணி கான்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க கதாநாயகியாகவும் ராஜ்குமார் ரயோ கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.
குறித்த நிகழ்வில், திரைப்படத்தில் தோன்றியிருந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் உட்பட பச்சன், திவ்யா டுட்டா, அனில் கபூர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திரைப்படம் தனது திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய பாகமாக அமையும் வகையிலானதொரு சிறந்த கதையமைப்பை கொண்டுள்ளதாகவும், இரசிகர்கள் நிச்சயமாக இப்படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புவதாகவும் நிகழ்வில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய் குறிப்பிட்டார்.
‘ஃபணி கான்’ திரைப்படம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.