சிம்புவிற்கும் நடிகை நயன்தாராவிற்கும் இடையே காதல் உள்ளது என்று நயன்தாரா நடிக்க வந்த ஆரம்ப புதியதில் கூறப்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.
அதன் பின் சிம்புவுடன் நடிகை ஹன்சிகா மோத்வானியை இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வெளிவந்தன. சொல்லப்போனால் இந்த காதல் திருமணத்தில் தான் சென்று முடியும் என்று ரசிகர்கள் உள்பட அனைவரும் கருதினர். ஆனால் கடைசியில் இந்த காதலும் பிரிந்தது.
இந்நிலையில் சிம்பு வெங்கட்பிரபுவுடனான மாநாடு பட வேலைகளுக்கு இடையே ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகிவரும் மஹா படத்திலும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளாராம். அதாவது ஒரு பாடல் காட்சியில் மட்டும் சிம்பு நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.