சினிமாவில் பல கலைஞர்கள் அடையாளம் கிடைக்க போராடி வருகின்றனர். அப்படி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு உதவும் வகையில் அமைந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.
தமிழில் இரண்டு சீசன்கள் முடிந்துவிட்டது, அடுத்த சீசன் எப்போது என்பதற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சாண்டியை விவாகரத்து செய்தவர்.
இப்போது அவர் ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சாண்டியின் இரண்டாவது மனைவி மற்றும் அவரது குழந்தையோடு காஜல் உள்ளார். சாண்டி மற்றும் அவரது மனைவி இருவரும் குழந்தையை பார்க்க தன்னை அவர்களது வீட்டிற்கு அழைத்ததாக பதிவு செய்துள்ளார்.
Both of them are super kind to invite me to see their daughter. God bless y’all ???had a great time. Tqsm https://t.co/22zOlOalAc
— Kaajal Pasupathi (@kaajalActress) January 23, 2019