நடிகர் ஆர்யா நீண்டகாலமாக திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். அவருக்கு பெண் தேட நடத்தப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் அவர் யாரையும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்.
இந்நிலையில் நடிகை சாயிஷாவுக்கு ஆர்யாவுக்கு வரும் மார்ச் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுளள்து என தகவல் தற்போது பரவிவருகிறது.
அவர்கள் இருவரும் தற்போது காப்பான் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் சயீஷா மற்றும் அவரது அம்மாவும் ஆர்யாவுடன் எப்போதும் நெருக்கமாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.