அஜித் மற்றும் விக்ரம் நாயகியாக நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா திரிவேதி தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார். இவர் ‘மகத்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
அஜித் நடித்த ‘ராஜா’, விக்ரம் நடித்த ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி.
இவர், 2003 ஆம் ஆண்டு கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இறுதியாக அருண் விஜய்யுடன் பிரியங்கா நடித்த ‘ஜனனம்’ திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது.
தற்போது பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மகேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.
அடுத்த வாரம் முதல் பிரியங்கா படக்குழுவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
குழந்தைகள் வளரும் வரை நடிப்பில் இருந்து விலகி இருந்த பிரியங்கா கன்னடம், வங்கத் திரையுலகில் சில படங்களில் நடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.