‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் தனுஷ் உடன் இணைந்துள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இத்திரைப்படத்தில், தனுஷ் அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்துள்ளார். அப்பா தனுஷூக்கு ஜோடியாக சினேகா நடிக்கின்றார். ‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்கு பிறகு சினேகா மீண்டும் தனுஷூடன் இணைந்துள்ளார்.
அதேநேரம், மகன் தனுஷூக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்குரிய வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகின்றார்.
தற்போது, தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.