இயக்குனர் கௌதம் மேனன் – சூர்யா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இவர்களின் கூட்டணியில் ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’ ஆகிய வெற்றித் திரைப்படங்கள் உருவாகியுள்ளன.
தற்போது சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘சூரறை போற்று’ திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.