நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் பி.வினோத் ஜெயின் தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான பார்த்திபன் இயக்கியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி ஜோடி சேரும் இந்த திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குனர் பன்னீர்செல்வம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.