பாலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோனின் கவனம் முழுவதும் தற்போது தென்னிந்திய மொழி படங்கள் மீது தான் உள்ளது.
தமிழில் இவர் நடித்துள்ள வீரமாதேவி விரைவில் திரையை காண உள்ள நிலையில் மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் உருவாகிவரும் மதுர ராஜா என்ற படத்தில் ஒரு ஒரே பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடலுக்கு நடனமாடிய அனுபவத்தை குறித்து பேசிய சன்னி, பாடலுக்கு வாயசைத்து பாடி நடிப்பதில் எந்த சிரமும் இருக்கவில்லை, ஆனால் நடன இயக்குனர் ராஜீ சுந்தரத்தின்(பிரபுதேவா சகோதரர்) நடன அசைவுகள் தான் தன்னை சிரமப்படுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
இவர் மலையாளத்தில் ரங்கீலா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.