மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கங்கனாரனாவத் 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஹிந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பளத்தொகை தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க எந்த நடிகைகளுக்கும் வழங்கப்படாத தொகையாக பார்க்கப்படுகிறது. நடிகை கங்கனாரனாவத் தற்பொழுது பங்கா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜெயலிலாதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயக்குநர் விஜய் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு தலைவி என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.