நடிகர் விஜய் மீது நீண்டநாளாக அரசியலுக்கு வருவார் என்ற எதிரபார்பு இருக்கிறது என்று சொல்லலாம். அவரின் படங்களுக்கு சர்ச்சை எழுப்பவது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. அவரும் பொறுமையாக இருந்து அதை எதிர்கொண்டு வருகிறார்.
அவரின் படங்கள் பல வெற்றி பெற்றிருப்பதன் பின்னணியில் சில அதிர்ச்சியளிக்கும் பக்கங்களும் உண்டு. அதில் ஒன்று தலைவா. Time To Lead என்ற ஒரு வசனத்திற்காக இப்படம் வெளியாவதே கேள்விக்குறியாக இருந்தது.
பின் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படம் வெளியானது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்த இப்படம் 2013 ஆகஸ்ட் 09 ம் வெளியானது. அமலா பால் ஜோடியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழகம் தவிர உலகம் முழுதும் வெளியாகிவிட்டது. ஆனால், மூன்று நாட்கள் கழித்து தான் தமிழ்நாட்டில் வெளியானது. அதற்குள், திருட்டு வீடியோ இணையதளங்களில் படத்தை அப்லோட் செய்து வசூலுக்கு மிகப்பெரிய பதிப்பை ஏற்படுத்திவிட்டார்கள். படம் கடுமையான நஷ்டத்தில் முடிந்தது.
இதற்கெல்லாம் காரணம், அப்போதிருந்த அரசு தான் என்ற ஒரு பேச்சு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் போஸ்டர் , பேனர் என கலக்கி வருகிறார்கள். அதிலும், மதுரையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் “மறக்க மாட்டோம்” என்ற வசந்துடன் நிற்கும் பேனரை பார்த்த நெட்டிசன்கள் “தரமான சம்பவம்” என்று கமென்ட் கொடுத்து வருகிறார்கள்.
மறக்க மாட்டோம் ?
தளபதி ரசிகர்கள் தளபதி வெறியன் ஆக மாறினார்கள் pic.twitter.com/A6AyQIsWrf
— JOSEPH A A D 😉 (@Official_AAD) August 4, 2018