கமல்- ஷங்கரின் கூட்டணியில் கடந்த 1996ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன படம் இந்தியன்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக கடந்த ஆண்டு முழுவதும் கூறப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் பூஜை இந்தாண்டு தொடக்கத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாக சில நாட்களுக்கு முன் இந்தியன்-2 வேலைகள் மீண்டும் ஆரம்பமாகின. காஜல் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், நடிகர் சித்தார்த் சமீபத்தில் இணைந்த நிலையில் தற்சமயம் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.