சீரியல் நடிகைகளுக்கும் இப்போது ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் இருக்கிறது. அதில் நடிகைகள் சிலர் டிவி சானல் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார்கள். இதில் ஒருவர் நடிகை சாய் பிரியங்கா.
பூவே பூச்சடவா, கேளடி கண்மணி, கல்யாணமாம் கல்யாணம் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் கிராமத்தில் ஒரு நாள், டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், மெட்ரோ என்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நேற்று தனுஷ் தன் டிவிட்டரில் ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல் ஒரு சின்ன கோடு தான் என்ற படத்தின் டீசரை வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் நிகழும் போதை உலக ரகசியங்களை பற்றி கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படம் தயாராகியுள்ளது. இதை சி.வி.குமார் இயக்கியுள்ளார். இயக்குனர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், விஷ்வா ஆகியோர் வில்லன்களாகவும் மேலும் ஆடுகளம் நரேன், பி.எல்.தேனப்பன் என பலர் நடிக்கிறார்கள்.
மேலும் சாய் பிரியங்கா போதை கடத்தல் ராணியாக நடிக்கிறாராம். ஹெராயின் போன்ற விலை உயர்ந்த போதைப்பொருட்களை பின்னணியாக கொண்ட இக்கதையை பார்க்கும் போது இந்தி படம் பார்த்த உணர்வு கிடைக்கும். தமிழுக்கு மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Glad to launch the first look teaser of gangs of madras https://t.co/hAbZPF0LJy @icvkumar @dopkarthickk @editorRAD @dafusiamusic @shyamalangan @ashokactor @LahariMusic @ThirukumaranEnt good luck to the team.
— Dhanush (@dhanushkraja) February 20, 2019