நடிகை சிம்ரன் இந்த வயதிலும் எப்படி ஸ்லிமாக இருக்கிறார் என பலரையும் கேட்க வைத்து விட்டது அண்மையில் வந்த பேட்ட படம். 90 களில் அஜித், விஜய் என சூப்பர் ஹீரோக்களுடன் கலக்கியவர்.
இவர்களுடன் நடித்த படங்கள் ஹிட்டானதும் உண்டும். அவ்வருடங்களை சேர்ந்தவர்கள் இதனை மறந்திருக்க மாட்டார்கள். திருமணம், குழந்தைகள், குடும்பம் என ஆன பிறகு அவர் பேட்ட படத்தில் ரீ எண்டிரி கொடுத்தார்.
இதையடுத்து மாதவனுடன் சேர்ந்து நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் என இருவரும் ஜோடி சேர்ந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இணைகிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்தில் இப்படம் எடுக்கப்படவுள்ளது.
மாதவன் நம்பியாக நடிப்பதோடு ஆனந்த் மகாதேவனுடன் படத்தை இணைந்து இயக்குகிறார். இப்படத்தில் பெரும் பாலும் சிம்ரனுக்கு வயதான தோற்றம் தான் இருக்குமாம்.