தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் பேட்ட மரண மாஸ் டிரைலருக்கு போட்டியாக நாளைக்கு வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
தம்பி ராமையா, சத்யராஜ், ஜகபதி பாபு, ராஜ்கிரண், போஸ் வெங்கட், கோவை சரளா, மைம் கோபி, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியாக உள்ளது. அண்மையில், இப்படத்தின் அடிச்சிதூக்கு, வேட்டிகட்டு மற்றும் தல்லே தில்லாலே ஆகிய பாடல்களின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரலாது. மேலும், ஒட்டு மொத்த பாடல்களும் ஜூக் பாக்ஸாக வெளியானது.
இந்த நிலையில் தலைவர் ரஜினிகாந்தின் பேட்ட மரணம் மாஸ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து வருத்தத்தில் இருந்த தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் டிரைலர் தொடர்பான் அறிவிப்பு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஆம், நாளை பிற்பகல 1.30 மணிக்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் விஸ்வாசம் டிரைலர் வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தல ரசிகர்கள் தற்போதே கொண்டாட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது