சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பேட்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்… இந்த திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது…
இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று பிரமாண்டமாக சென்னையில் ஒரு கல்லூரியில் நடைபெற்றது… இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி சார் மிகச்சிறந்த மனிதர் அவரைப்போல் இதுவரை எந்த ஒரு நடிகரையும் நான் பார்த்ததில்லை அவர் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் சாதாரணமாக ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்…
மேலும் எத்தனை நடிகர்கள் வந்தாலும் அவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.. இவர் இப்படி கூறியதும் இவர் விஜயை தான் மறைமுகமாக சொல்கிறாரோ என்ற எண்ணமும் தோன்றியது… ஏன் என்றால் விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 வசூலில் இருந்து வருகிறார்… இது பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமண்டில் தெரிவிக்கவும்…