நடிகை கஸ்தூரியின் பெயர் அடிக்கடி சமூக வலைதள விமர்சனங்களில் அடிபடும். அப்படியாக அவர் நாட்டில் நடக்கும் விசயங்கள் குறித்து ஏதாவது ஒரு கருத்து பதிவிட்டு வருகிறார்.
இதில் சர்ச்சைகளும் இடம் பெறுகின்றன. அண்மையில் அவரை அஜித் ரசிகர்கள் கடுமையாக டிவிட்டரில் விமர்சித்தனர். அதே போல பெரியார் இயக்க ஆதரவாளர்களும் அவரை திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் கஸ்தூரி தற்போது நடைபெற்று வரும் அரசு பள்ளி, ஆசிரியர்கள் போராட்டம் பற்றியும் போராட்டக்காரர்களையும் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
இதனால் அவரை பக்கம் பக்கமாக அவரின் பதிவுக்கு கீழ் கடுமையாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.