நடிகா் ரகுமான், மே மாதம் 23-ல் அபிதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஹ்மான் படத்திற்காக பெண் வேடம் போட்டபோது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.
மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் கேரளாவை சேர்ந்த ரஹ்மான். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகலை. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரஹ்மான் நடித்த துருவங்கள் 16 படம் ஹிட்டானது.புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் பாலச்சந்தர் இவரை வைத்து இயக்கினார்
ரஹ்மானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 1984ம் ஆண்டு வெளியான இத்திரி பூவே சுவன்னபூவே மலையாள படத்தில் ரஹ்மான் பெண் வேடம் போட்டிருந்தார்.
அவர் பெண் வேடம் போட்டது போன்றே இல்லை நிஜமாகவே பெண் போன்று அழகாக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
புகைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ரஹ்மானா இது என்று ஆச்சரியப்படுகிறார்கள்.