காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசரில் அதிர்ச்சி காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.
தமிழில் முன்னணி நடிகைகளும் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்துள்ள படம் பாரிஸ் பாரிஸ்.
ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை காஜல் அகர்வாலை ஒருவர் காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகு காஜல் தனியாக பாரிசுக்கு ஹனிமூன் செல்கிறார்.
இதையடுத்து பாரிஸில் அவர் செய்யும் அலப்பறைகள் செம காமெடியாக காட்டப்பட்டுள்ளன. இந்த டீசரில் ஒரு காட்சியில் பெண் ஒருவர் காஜலின் மார்பகத்தை பிடித்து அழுத்துகிறார். அதற்கு அவர் அதிர்ச்சி ஆகிறார்.
டீசரில் இடம்பெற்றுள்ள இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக இந்த காட்சிக்கு எதிர்ப்பு குரல் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
மேலும், டீசரின் இறுதியின் செக்ஸ் சம்பந்தப்பட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, பாரிஸ் பாரிஸ் என்ன மாதிரியான படம் என்ற கேள்வி எழுகிறது.
கிளாமர் ரோல்களில் நடித்தாலும், காஜலுக்கு நிறைய பேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். அவர் இதுபோன்ற காட்சிகளில் நடித்து அந்த ரசிகர்களை இழந்துவிடக்கூடாது என திரைத்துறையினர் கவலை கொண்டுள்ளனர்