இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தென்னிந்தியாவிலும் கடந்த இரண்டு வருடங்களாக பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று அனைத்து மொழிகளிகளும் பிக் பாஸ் சூப்பர் டூப்பட் ஹிட்டடித்துவிட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிக் பாஸ் இரண்டு பாகங்களை கடந்த நிலையில், தற்போது மூன்றாம் பாகத்திற்கு ரெடியாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டு டைடிலை வென்றவரின் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவர் இதுவரை எந்தவித மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ளாமல் தனது கணவரின் சினிமா பயணத்தின் வெற்றிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெலுஙகில் பிக் பாஸ் சீசன் 2 டைடில் வெற்றி பெற்றவர் கெளஷல். ஏராளமான ரசிகர்களை கொண்ட கெளஷல், தான் ஜெயித்த பணத்தை மற்றவர்களுக்கு உதவுவதாக கூறியிருந்தார், ஆனால் இப்போது வரை எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த கெளசல், 50 லட்சம் பரிசுத் தொகை என் கையில் 34 லட்சமாக தான் வந்துள்ளது. நோய் என்று சொல்பவர்களுக்கு பணத்தை அப்படியே தூக்கி கொடுத்துவிட முடியாது. அவர்கள் பற்றி தெளிவாக விசாரித்த பிறகே கொடுப்பேன்.
உங்களுக்கு தெரியாது என் மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் இன்னும் சிகிச்சை செய்ய ஆரம்பிக்கவில்லை. என்னுடைய திரைப்பயணம் ஆரம்பித்தே பிறகே சிகிச்சை செய்து கொள்வேன் என்று இருக்கிறார், என்று தெரிவித்திருக்கிறார்.
