புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் பூதமங்கலம் போஸ்ட். இதனை ராஜன் மலைச்சாமி இயக்கி நடிக்கிறார். அவருடன் மவுனிகா ரெட்டி, அஸ்மிதா, விஜய் கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் அஸ்மிதா தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். அர்ஜுன் இசை அமைக்கிறார். பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி ராஜன் மலைச்சாமி கூறியதாவது:
நாம அரசியல்ல இருக்கலாம் நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள் படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது. இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியலில் அதிகாரத்தை கைபற்றினார்கள் என்பதை ஆக்சனுடன் நகைச்சுவை கலந்து சொல்லும் படம். என்கிறார்.