நடிகை அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது, ஹிந்தி சினிமா பக்கம் திரும்பியுள்ளார். முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ள திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க அமலாபாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ” நாளை எனக்கு மிகவும் பெரிய நாள் என்றும். கடந்த ஒரு வருடமாக இதற்காக நான் காத்துக்கொண்டும், அதற்க்கான வேலைகளை செய்துகொண்டும் இருக்கிறேன். என்னுடைய வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் இந்த விஷ்யத்தி என்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. காத்திருங்கள்..! “என்று எதைப்பற்றி கூறுகிறேன் என்பதை சொல்லாமலேயே முடித்திருந்தார்.
இந்நிலையில், அது என்ன விஷயம் என்று இப்போது கூறியுள்ளார். ஆம், சொந்தமாக ஒரு ஆரோக்கிய பானம் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் அமலா பால். இந்த பானம் 14 மூலிகைகள் அடங்கிய ஒரு புத்துணர்ச்சி பானமாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்அருந்தலாம். இதற்கு, “Night Recovery” என்று பெயர் வைத்துள்ளார் அம்மணி.