நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்றதும் நம் நினைவிற்கு வருவது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். டிவியில் அவர் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி சர்ச்சையில் பலமுறை சிக்கியது.
விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்தவர் அம்மணி என்ற நல்ல கதையுள்ள படத்தை இயக்கினர். சமூகவலைதளத்தில் சில அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பேருந்து ஒன்று வழிவிடாமலும், யாரையும் பொருட் படுத்தாமல் முந்திகொண்டு சென்றுள்ளது. இதனால் அவர் அந்த பேருந்து புகைப்படத்தை வெளியிட்டு நிறுவனத்தை டேக் செய்து ஓட்டுனருக்கு சரியாக ஓட்ட சொல்லுங்கள்.. ரோடு அவருக்கு மட்டும் சொந்தமானதல்ல என கூறியுள்ளார்.
.@parveentravels pls instruct this driver to drive properly, road does not belong to him alone!!! , he is rash and absolutely irresponsible . pic.twitter.com/XITsmChADM
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 24, 2019